தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-11-03 17:15 GMT
கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை கிராமத்தில் ஒரே வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மையம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் இங்கு தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மையத்துக்கு செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ,இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்