விக்கிரவாண்டி தாலுகா வி.புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வடிகாலில் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் வடிகால் நிரம்பி, கழிவுநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. எனவே, வடிகால் பணியை தொடங்கி முழுயாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.