வில்லியனூர் கணுவாபேட்டை ரோடு அன்னை நகரில் உள்ள காலி மனைகளில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.