ஆற்றுக்கோணம் மேலத்தெரு பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் சில வீட்டில் இருந்து கழிவுநீ் வெளியேற்றப்படுகிறது. மேலும், ஓடையை முடியாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் ஓடையில் கழிவுநீர் திறந்து விடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வென்சஸ்லாஸ், ஆற்றுக்கோணம்.