கிடப்பில் வடிகால் வாய்க்கால் பணி

Update: 2024-09-22 16:34 GMT
விக்கிரவாண்டி அருகே வி.புதுப்பாளையத்தில் உள்ள விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்