கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவில் உள்ள கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க வாய்க்காலை தூர்வார வேண்டியது அவசியம்.