சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாககுப்பம் கிராமத்தில் உள்ள காலனி தெருவில் கழிவுநீர் கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இதனால், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இந்த குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குடிநீர் குழாயை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.