திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் அரும்பாக்கம் கிராமம் 3-வது வார்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெருவில் வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்துவதோடு, வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.