மணலூர்பேட்டை பேரூராட்சி தியாகதுருகம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் தேங்கி நின்று, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்க்கு வழிவகுக்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் இணைந்து மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.