கள்ளக்குறிச்சி அருகே வீ.பாளையம் காலனியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைப்பதோடு, குப்பைகளையும் அள்ளி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.