தியாகதுருகம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போது கழிவுநீர் கால்வாய் உடைக்கப்பட்டது. ஆனால் அதை மீண்டும் சீரமைக்காமல் அப்படியே போட்டு விட்டனர். மேலும் உடைக்கப்பட்ட கற்கள் சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ளது. எனவே கால்வாயை சீரமைப்பதோடு, சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள கற்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.