சுகாதார சீர்கேடு
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் பகுதியில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகில் உள்ள கழிவுநீர் ஓடையை முறையாக அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், ஓடையில் குப்பைகள் நிரம்பி காணப்படுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குப்பையை அகற்றி ஓடையை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-அப்துல் ரசாக், இனயம்.