சுகாதார சீர் கேடு
புதுக்கடை அம்பாள் நகரில் சந்திமூட்டில் 14-வது வார்டில் சாலையோரம் கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்தும், கழிவுநீர் வடிந்ேதாட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ேமலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகிதேவ், புதுக்கடை.