சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமம் 10-வது வார்டில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரி அப்பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.