கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சி அக்கராயப்பாளையத்தில் இருந்து சாம்பாரப்பன் ஓடை வரை சாலையோரத்தில் உள்ள கால்வாய் தூர்ந்து பூதர்மண்டி காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.