செஞ்சி காந்தி கடை வீதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்வதோடு, கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.