கள்ளக்குறிச்சியில் சேலம் நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள கால்வாயில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.