சின்னசேலம் தாலுகா கா.செல்லம்பட்டு கிராமம் தெற்கு தெருவில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையோரத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து பலனில்லை. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.