அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே மணவெளி கிராமத்திற்கு செல்லக்கூடிய மெயின் ரோடில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.