திருவெண்ணெய்நல்லூர் அருகேசெம்ம ஊராட்சி காலனி பிள்ளையார் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்காத காரணத்தால் அங்கு சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றுவதோடு, அங்கு ஆக்கிரமிப்பை அகற்றி கழிவு நீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.