சேலம்-பெங்களூரு பைபாஸ் சாலையில், ஸ்டேட் பாங்க் காலனி –திருவாக்கவுண்டனூர் இடையேயான சர்வீஸ் சாலையில் பாலம் அருகே சாலை சேதமாகி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் தளமும் உடைந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து அபாயம் உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.