புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லுக்காரன்பட்டிக்கு செல்லும் விளக்கு சாலையில் வடக்குத்தெருவுக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை அரை கிலோமீட்டருக்கு கப்பி சாலையாக உள்ள நிலையில், கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தோடு சாலையை கடந்து செல்கின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.