புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை - வடக்கு தொண்டைமான்ஊரணி சாலையில் இருந்து கீழத்தொண்டைமான்ஊரணிக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. மழையூர், ஆலங்குடி, கருப்பட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் இரண்டரை கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் பல்வேறு இடங்களில் கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தோடு சாலையை கடந்து சென்று வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.