ஒட்டன்சத்திரம் தாலுகா புதுச்சத்திரம் முதல் பொம்மநல்லூர் வரை சாலை சேதமடைந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுமட்டுமின்றி கனரக வாகனங்களும் அந்த வழியாக அடிக்கடி சென்றுவருவதால் சாலை மேலும் சேதமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.