புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி குறிஞ்சாவயல் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதுடன் பெரிய அளவிலான பள்ளங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பெரிய அளவிலான பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.