திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கூத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளி அருகே உள்ள பிடாரி கோவில் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தேங்கி கிடக்கும் மழைநீரில் நடந்து செல்கின்றனர். மழைநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடாரிகோவில் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.