குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2024-11-17 13:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதியில் இருந்து வானக்கன்காடு செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழையானது இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி குளம்போல் நிற்கிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்