சேறும், சகதியுமான சாலை

Update: 2024-11-10 12:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மருத்துவமனை வழியாக கொத்தமங்கலம், சிதம்பரவிடுதி வரை வடகாடு, கீழாத்தூர், கொத்தமங்கலம் கிராம எல்லைகளை இணைத்து செல்லும் இந்த மண் சாலையானது மழை நாட்களில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது. மேலும் மழை நாட்களில் சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகின்றன. இப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல், சோளம், கடலை, உளுந்து மற்றும் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் மற்றும் பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பலரும் இவ்வழியையே பயன்படுத்தி வரும் நிலையில், மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படும் இந்த மண் சாலையை செப்பனிட்டு தார் சாலையாக தரம் உயர்த்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்