சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அங்கு மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.