புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் இருந்து ராஜாபகதூர் வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.