நாங்குநேரி ஒன்றியம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எடுப்பூர் கிராமம் காமராஜர் தெருவில் சாலை, வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் மற்றும் மழை காலங்களில் மழைநீர் ஆகியவை தெருக்களில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் அபாயமும் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?