தலைவாசல் சர்வீஸ் சாலையில் போலீஸ் நிலையத்திற்கு திரும்பும் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் சர்வீஸ் சாலையில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் பணிக்காக அமைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து அதை மூடாமல் திறந்த படியே விட்டு சென்றனர். இதனால் அடிக்கடி இரவில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இப்பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதனால் ஆபத்தான பள்ளத்தை அதிகாரிகள் விரைந்து கற்கள் கொண்டு மூடி சாலை அமைத்து தர வேண்டும்.
-கிருஷ்ணன், தலைவாசல்.