தியாகதுருகம் அருகே விளக்கூர் கிராமத்தில் இருந்து வேங்கைவாடி செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ தூரம் உள்ள வயல்வெளி சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை எடுத்துச்செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.