கூடலூர் நகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் தொடர் மழையால் ஆபத்தான குழிகள் ஏற்பட்டு உள்ளன. அந்த குழிகளில் மழை நேரங்களில் மழைநீரும் தேங்கி நிற்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகின்றன. அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த குழிகளை மூட நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.