மேம்பாலத்தில் மின்விளக்கு அவசியம்

Update: 2024-10-13 17:57 GMT

ஓமலூர்-தர்மபுரி செல்லும் நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் வளைவு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு மேம்பாலத்தின் தடுப்பு சுவர் சரியாக தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த பகுதியில் மின்விளக்குகள் அவசியம் பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்