தியாகதுருகம் அருகே கொங்கராயப்பாளையம்-உடையனாச்சி செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.