திசையன்விளை அருகே இட்டமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட விஜய அச்சம்பாடு கிராமத்தில் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு கொடுப்பதற்காக குழாய்கள் அமைக்க தெருக்களில் குழிகள் தோண்டப்பட்டது. குடிநீர் குழாய்கள் இணைப்பு பணி முடிவடைந்தும் தெருக்கள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும் தெருக்களில் செல்லும் போது தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தோண்டப்பட்ட இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.