சின்னசேலம் அருகே பைத்தந்துறை முதல் நாககுப்பம் வரை உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும்போது சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.