டிராக்டர்களால் விபத்து

Update: 2024-08-25 18:10 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி ஏரியில் தினமும் 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் எடுத்து செல்கின்றன. மண் ஏற்றிக்கொண்டு சாலையில் அதிவேகமாக செல்லும் டிராக்டர்களால் விபத்து ஏற்படுகிறது. மேலும் டிராக்டரில் இருந்து மண் கட்டிகள் சரிந்து சாலையில் விழுகின்றன. இதனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் எடுத்து செல்லும் டிராக்டர்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்