ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகில் அரசு ஆஸ்பத்திரி, பேரூராட்சி அலுவலகம், நீதிமன்றம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த பிரதான பகுதியில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இதனால் ஆஸ்பத்திரி, அரசு அலுவலங்களுக்கு வரும் வாகனங்கள் வேகமாக வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், அரசு அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.