கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் குடிநீர் திட்டத்துக்காக ஆங்காங்கே சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து கிடக்கின்றன. அந்த சாலைகளை பயன்படுத்தும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தற்போது மழை பெய்து வருவதால் சாலைகள் மேலும் மோசமாக காட்சி அளிக்கின்றன. இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.