குண்டும், குழியுமான சாலை

Update: 2024-07-28 10:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி சீனிகடை முக்கத்திலிருந்து பஸ் நிலையம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். தபால் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு பள்ளிகள், மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம் என அனைத்தும் இப் பகுதியிலேயே உள்ளன. மோசமான இந்த சாலையால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்