புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்டேட் பேங்க் செல்லும் சாலையில் தினமும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையை புதிய தார்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.