புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரிலிருந்து கூத்தாச்சிப்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையிலிருந்து பிரிவுசாலை மனவாத்திப்பட்டி, மங்களத்துப்பட்டி, பூங்குடிப்பட்டி வழியாக அண்டக்குளம் வரை செல்லும் 8 கிலோ மீட்டர் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.