மண் சாலையாக மாறிய தார் சாலை

Update: 2024-05-12 14:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள ஆவாம்பட்டியில் இருந்து படுதிணிப்பட்டி வழியாக சடையம்பட்டி தார்சாலை வரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போதும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்