குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2024-05-12 13:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சன்விடுதியில் இருந்து ஆலங்குடி மனிபள்ளத்தை இணைக்கும் தார் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்