புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த கடுக்காகாடு கிராமத்தில் இருந்து சூரக்காடு செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் சாலை போட்ட நிலையில் தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கப்பி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. மாணவ- மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.