கள்ளக்குறிச்சி -சேலம் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பாதையில் சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால் அங்கு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடராமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.