சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய 4-வது வார்டு ஏரிகொடியில் இருந்து வேடப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் மின் கம்பத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இந்த அபாயகரமான வளைவு சாலையில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாததால் இருள் குழந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுப்பார்களா?