சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-11-26 10:40 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஏராளமான குடியிருப்புகளுக்கு செல்லும் தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்